SuperTopAds

உக்ரைன் மக்களின் செல்லப்பிராணிகளுக்கும் ஆபத்து!! -நாய், பூனை கறியாக்கி சாப்பிடும் ரஷ்ய படையினர்-

ஆசிரியர் - Editor II
உக்ரைன் மக்களின் செல்லப்பிராணிகளுக்கும் ஆபத்து!! -நாய், பூனை கறியாக்கி சாப்பிடும் ரஷ்ய படையினர்-

உக்ரைனில் மீது ரஷ்ய படைகள் நடத்திவரும் தாக்குதலை அடுத்து அங்கிருந்து சுமார் 30 இலட்சத்திற்கும் மேலானவர்கள் அகதிகளாக வெளியேறியுள்ள நிலையில் அவர்கள் தமது உடமைகளை எடுத்துச் செல்லவே சிரமப்படும் போது பாசமாக வளர்த்த வீட்டு பிராணிகளை பிரிய மனமில்லாமல் பெரும் கவலைக்குள் சிக்கி உள்ளனர்.

இதனை அவதானித்த போலந்து நாட்டில் கார்கோவ் நகரில் தன்னார்வலர் தம்பதியினர் வீட்டு வளர்ப்பு பிராணிகளுக்கென ஒரு முகாம் அமைத்துள்ளார். இதில் அகதிகள் பிராணிகளை விட்டு செல்லலாம். இலவசமாக பத்திரமாக பார்த்து கொள்கின்றனர். 

இதற்கிடையில் ரஷ்யா படையினர் உணவு தட்டுப்பாடு காரணமாக நாய், பூனை, எலியை கொன்று சாப்பிட துவங்கி இருப்பதாகவும் பரவுகிற ஒரு தகவல் வீட்டு பிராணி வளர்ப்போரை பெரும் அதிர்ச்சிக்குள் தள்ளியுள்ளது.

குறித்த முகாமில் இதுவரை 100 பிராணிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் நாய், பூனை, குரங்கு, எலி, பல்லி, பாம்புகள் அடங்கும் என்று அந்த தன்னார்வலர்கள் தகவல் nரிவித்துள்ளனர். 

இருப்பினும் இன்னும் பலர் தங்களின் செல்லப்பிராணிகளை அழைத்து செல்ல முடியாத காரணத்தினால் போர் நடக்கும் பகுதியிலேயே பதுங்கி இருப்பதாகவும் ஒரு தகவல் தெரிவிக்கிறது.