புதின் ஒரு கசாப்புக்கடைக்காரர்!! -கடும் ஆவேசத்துடன் விமர்சித்த பைடன்-
உக்ரைன் மீது போரை தொடர்ந்து வடத்திவரும் ரஷிய ஜனாதிபதி புதினை கடுமையாக விமர்சித்து அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார்.
உக்ரைனினின் அண்மைய நாடான போலந்துக்கு ஜனாதிபதி ஜோ பைடன் சென்று உள்ளார். போலந்து தலைநகர் வார்சாவில் ஜோ பைடன் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-
உக்ரைனில் ரஷியாவுக்கு வெற்றி கிடைக்காது. இந்த போரில் சில நாட்களிலோ, சில மாதங்களிலோ வெற்றி பெற முடியாது. நீண்ட காலத்துக்கு தொடரக்கூடும். ரஷிய ஜனாதிபதி புதினுக்கு எதிராக பெரும் பொருளாதார நாடுகள் ஒன்றுபட வேண்டும். கடவுள் அருளால் இந்த மனிதர் (புதின்) ஆட்சியில் நீடிக்க கூடாது. அவர் அதிகாரத்தில் இருக்க முடியாது.
புதின் ஒரு கசாப்புக் கடைக்காரர். உக்ரைன் மீதான ரஷியாவின் ஊடுருவலை சுதந்திர உலகம் எதிர்க்கிறது என்றார். புதின் ஆட்சியில் நீடிக்க கூடாது என்ற ஜோ பைடன் கருத்துக்கு ரஷியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.