பிஸ்கட் பக்கெட் திருடிக் கொடுத்துவிட்டு தப்பி ஓடிய தந்தை, சிக்கிய 11 வயது சிறுமி மீது தாக்குதல்! தந்தை உட்பட பலர் கைது, மேலும் சிலரை தேடுகிறது பொலிஸ்..
11 வயது சிறுமிக்கு பிஸ்கட் வாங்கி தருவதாக கூறி கடைக்கு அழைத்துச் சென்று பிஸ்கட் பக்கெட் ஒன்றை திருடிக் கொடுத்த தந்தையை அங்கிருந்தவர்கள் கண்டுள்ளனர். இதனையடுத்து சிறுமியை கைவிட்டு தந்தை தப்பி ஓடியுள்ளார்.
இந்நிலையில் 11 வயது சிறுமியை பிடித்த அங்கிருந்தவர்கள் சிறுமி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக மேலும் இரு சந்தேகநபர்கள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை அக்கரைப்பற்று நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சிறுமி தாக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரான சிறுமியின் தந்தை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
31 வயதான குறித்த நபர் அக்கரைப்பற்று நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
தாக்குதலுக்கு இலக்கான சிறுமியின் தாயிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக்குடியிருப்பில் கடந்த வியாழக்கிழமை சிறுமியொருவர் தாக்கப்பட்ட விதம் தொடர்பில் கையடக்க தொலைபேசியில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன.
பிஸ்கட் பெற்றுத்தருவதாக சிறுமியின் தந்தை கடைக்கு அழைத்துச்சென்று, பிஸ்கட் பக்கெட் ஒன்றை திருடிக் கொடுத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இதன்போது, சிலர் சுற்றிவளைத்தபோது, சிறுமியை அங்கு தள்ளிவிட்டு தந்தை தப்பிச்சென்றுள்ளார்.
இந்நிலையில் சிறுமியை பிடித்துக் கொண்ட சிலர் சிறுமி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலின்போது காயமடைந்த சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.