SuperTopAds

மேலும் ஒரு சாதனையை சமன் செய்தார் டோனி

ஆசிரியர் - Admin
மேலும் ஒரு சாதனையை சமன் செய்தார் டோனி

ஐபிஎல் டி 20 போட்டி தொடரில் புனேயில் நேற்று நடந்த பெங்களூருவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணி புள்ளிப்பட்டியலில் தற்போது 14 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்த போட்டியில் சென்னை அணியின் கேப்டனும்இ விக்கெட் கீப்பிங்கில் கில்லாடியுமான டோனிஇ எம்.அஸ்வின் (பெங்களூரு) விக்கெட்டை ஸ்டம்பிங் செய்து வீழ்த்தினார். இதன்மூலம் ஐ.பி.எல். போட்டி வரலாற்றில் அதிக முறை ஸ்டம்பிங் செய்து இருந்த கொல்கத்தா அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ராபின் உத்தப்பாவின் சாதனையை (158 ஆட்டத்தில் 32 ஸ்டம்பிங்) டோனி சமன் செய்தார்.

டோனி 169 ஆட்டங்களில் 32 முறை ஸ்டம்பிங் செய்து விக்கெட்டை சாய்த்து இருக்கிறார். இதனால் முதல் இடத்தை டோனிஇ உத்தப்பா ஆகியோர் பகிர்ந்து கொண்டுள்ளனர். கொல்கத்தா அணி கேப்டனும்இ விக்கெட் கீப்பருமான தினேஷ் கார்த்திக் 161 ஆட்டங்களில் 28 ஸ்டம்பிங் செய்து 2-வது இடத்தில் இருக்கிறார்.

அதோடு டோனிஇ இந்த தொடரில் அதிக சிக்ஸர் அடித்தவர்கள் பட்டியலில் 27 கின்ஸர்களுடன் முதல் இடத்தில் உள்ளார். அதிக ரன் அடித்தவர்கள் பட்டியலில் 360 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.