SuperTopAds

கல்முனை அஸ் ஸுஹரா 6 மாணவர்கள் சித்தியடைந்து வரலாற்றில் பெரும் சாதனை

ஆசிரியர் - Editor III
கல்முனை அஸ் ஸுஹரா 6 மாணவர்கள் சித்தியடைந்து வரலாற்றில் பெரும் சாதனை

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட கல்முனை அஸ் ஸுஹறா வித்தியாலயத்தின் வரலாற்றிலேயே இம்முறை 6 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று பாடசாலைக்கு பெருமை ஈட்டிக் கொடுத்ததோடு, வரலாற்று சாதனையையும் படைத்துள்ளனர்.

இதுவரை காலமும் இப்பாடசாலையில் 4 மாணவர்கள் மட்டுமே பாடசாலை வரலாற்றில் அதிகூடிய சித்தியடைந்த மாணவர்களாக காணப்பட்டனர்.

இப் பாடசாலைக்கு மாணவர்களின் புதிய அனுமதியின்மை குறைபாடு,கற்றல் செயற்பாடுகளில் மாணவர்களின்  ஆர்வமின்மை போன்ற பல காரணங்களினால் மூடுவிழா காண இருந்த இப்பாடசாலை கடந்த 2020ம் ஆண்டு புதிய அதிபராக கடமையேற்ற எம்.எஸ்.எச்.ஆர் மஜிதியாவின் ஆளுமையினாளும், திறமையினாலும் பாடசாலை ஆசிரியர்களின் அயராத உழைப்பினாலும், பாடசாலை அபிவிருத்தி சங்கம், பழைய மாணவர்களின் ஒத்துழைப்புக்களினாலும் குறுகிய காலத்திற்குள் 6 மாணவர்களை புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் சித்தி பெற வைத்து வெற்றபெற வைத்தமை பாராட்டத்தக்க வரலாற்று நிகழ்வாகும்.

கல்முனை முஸ்லிம் கல்விக் கோட்டத்தில் முன்னணி ஆரம்பக் கல்வி பாடசாலையாக திகழும் இப்பாடசாலையின் அதிபர் எம்.எச்.எஸ்.ஆர் மஜிதியாவின் வழிகாட்டலினாலும், பெற்றோர் ,ஆசிரியர் மாணவர்களின் அயராத முயற்சியினாலும் பெறப்பட்டுள்ள இந்த வெற்றிக்கு காரணமாக அமைந்த அனைவருக்கும் பாடசாலை சமூகத்தினர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.