விறகு எடுக்க சென்றிருந்த இடத்தில் பரிதாபகரமாக உயிரிழந்த 13 வயது சிறுவர்கள்..!
விறகு எடுப்பதற்காக சென்று மின் வேலியில் சிக்கிய 13 வயதான இரு சிறுவர்கள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் சம்மாந்துறை - நெய்னாகாடு கிராமத்தில் நேற்று மதியம் இடம்பெற்றிருக்கின்றது.
குறித்த தென்னத்தோப்பிற்கு வழமை போன்று விறகு சேகரிக்க சென்ற போது றியாஸ் முஹம்மட் ஆசீக் (13 வயது) மற்றும் முஹம்மட் இப்றாஹிம் (13வயது)
என்ற இரண்டு சிறுவர்களே மின்சார வேலியில் சிக்குண்டு உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த சம்மாந்துறை பொலிஸார்
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.