SuperTopAds

உக்ரைனை விட்டு வெளியேறிய 80,000 கர்ப்பிணிகள்!!

ஆசிரியர் - Editor II
உக்ரைனை விட்டு வெளியேறிய 80,000 கர்ப்பிணிகள்!!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான மோதல் காரணமாக உக்ரைனை விட்டு அகதிகளாக அண்மைய நாடுகளுக்கு வெளியேறியவர்களில் சுமார் 80,000 கர்ப்பிணித் தாய்மார்கள் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இவர்களில் நிறை மாத கர்ப்பிணிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. உரிய சுகாதார வசதிகள் இன்மையால் அவர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்வதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

இதுவரை 20 இலட்சம் உக்ரைனியர்கள், ஏதிலிகளாக வேறு நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.