SuperTopAds

17 நாடுகளை நட்புப் பட்டியலில் இருந்து நீக்கம்!! -ரஷியா அதிரடி நடவடிக்கை-

ஆசிரியர் - Editor II
17 நாடுகளை நட்புப் பட்டியலில் இருந்து நீக்கம்!! -ரஷியா அதிரடி நடவடிக்கை-

உக்ரைன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான் உள்ளிட்ட உலகில் முன்னணியில் உள்ள சுமார் 17 நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து ரஷியா அதிரடியாக நீக்கியுள்ளது. 

உக்ரைன் மீதான போர் விவகாரத்தில், தங்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்காமல் எதிரான நிலைப்பாட்டை எடுத்ததால், இத்தகைய நடவடிக்கையை ரஷியா மேற்கொண்டு இருக்கலாம் எனத் தெரிகிறது. 

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுக்கும் விவகாரத்தில் ஐநாவில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களுக்கு இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட சில நாடுகளை தவிர ஏனைய ஐரோப்பிய நாடுகள் போன்றவை ரஷிய எதிர்ப்பு நிலையை கடைபிடித்தது குறிப்பிடத்தக்கது.