SuperTopAds

உக்ரைன் போர் குறித்த வழக்கு!! -சர்வதேச நீதிமன்ற விசாரணையை புறக்கணித்த ரஷியா-

ஆசிரியர் - Editor II
உக்ரைன் போர் குறித்த வழக்கு!! -சர்வதேச நீதிமன்ற விசாரணையை புறக்கணித்த ரஷியா-

உக்ரைன் மீது ரஷியா படைகள் தொடுத்துள்ள போர் தொடர்பில் சர்வதேச நீதிமன்றம் ஆரம்பித்துள்ள விசாரணைகளை ரஷியா அரசாங்கம் புறக்கணித்துள்ளது. 

ரஷிய படைகளை வெளியேற்றக் கோரி உக்ரைன் அரசாங்கத்தால் தாக்கல் செய்த  மனு மீது ஐ.நா சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 

இந்நிலையில் இன்று திங்கட்கிழமை நடந்த விசாரணையை ரஷியா புறக்கணித்தது. இருப்பினும் உக்ரைன் பிரதிநிதி அன்டன் கோரினெவிச் பங்கேற்று தனது கருத்தை முன்வைத்து வாதாடினார். 

இதன் போது உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தும்படி ரஷியாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார். ரஷ்யா தடுத்து நிறுத்தப்பட வேண்டும், தடுத்து நிறுத்துவதில் நீதிமன்றத்தின் பங்கு உள்ளது என்றும் அவர் நீதிபதிகளிடம் கூறினார்.

சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் வைத்த கோரிக்கை மீது ஒரு சில நாட்களில் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.