SuperTopAds

பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்

ஆசிரியர் - Admin
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்

ஐபிஎல் தொடரின் 34-வது லீக் மத்திய பிரதேசம் இந்தூரில் நடைபெற்றது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. இரண்டு ஓவரில் கெய்ல் அதிரடி காட்டியதால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 6.1 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது. கேஎல் ராகுல் 20 பந்தில் 24 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 38 பந்தில் அரைசதம் அடித்த கெய்ல் ஆட்டமிழந்தார்.

கடைசி ஓவரில் பஞ்சாப் அணி 22 ரன்கள் விளாசி 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 175 ரன்கள் இலக்காக பஞ்சாப் அணி நிர்ணயித்துள்ளது. ஸ்டாய்னிஸ் 15 பந்தில் 22 ரன்கள் சேர்த்து கடைசி வரை களத்தில் இருந்தார்.

இதையடுத்து மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சூர்யகுமார் யாதவ், எவின் லெவிஸ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடினர். 5 ஓவர்கள் முடிவில் மும்பை அணி விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் எடுத்திருந்தது. ஆறாவது ஓவரை முஜீப் உர் ரஹ்மான் வீசினார். அந்த ஓவரின் 4-வது பந்தில் லெவிஸ் ஆட்டமிழந்தார். அவர் 13 பந்தில் 10 ரன்கள் எடுத்தார்.

அடுத்து இஷான் கிஷான் களமிறங்கினர். சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்தார். 10 ஒவர் முடிவில் மும்பை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்தது. 12-வது ஓவரை ஸ்டாயின்ஸ் வீசினார். அந்த ஓவரின் 4-வது பந்தில் சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழந்தார். அவர் 6 பவுண்டரிஇ 3 சிக்ஸர் உட்பட 42 பந்தில் 57 ரன்கள் எடுத்தார். அதைத்தொடர்ந்து ஹர்திக் பாண்டியா களமிறங்கினார்.

அதன்பின் இஷான் அதிரடியாக ரன் குவிக்க முயன்றார். முஜீப் வீசிய 13-வது ஓவரின் கடைசி பந்தில் இஷான் கிஷான் ஆட்டமிழந்தார். அவர் 19 பந்தில் 25 ரன்கள் எடுத்தார். இதில் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத்தொடர்ந்து மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா களமிறங்கினார். ஹர்திக் பாண்டியா 13 பந்தில் 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆண்ட்ரூ டை பந்தில் கிளீன் போல்டானார். அவரைத்தொடர்ந்து குருணல் பாண்டியா களமிறங்கினார்.

இறுதிக்கட்டத்தில் குருணல் பாண்டியாவும்இ ரோகித் சர்மாவும் அதிரடியாக விளையாடினர். 18-வது ஓவரில் மும்பை அணிக்கு 20 ரன்கள் கிடைத்தது. மும்பை அணி 19 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்துஇ 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 24 ரன்களுடனும்இ குருணல் பாண்டியா 12 பந்தில் 31 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். பஞ்சாப் அணியில் முஜீப் 2 விக்கெட் வீழ்த்தினார்.

மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை மும்பை அணி தக்கவைத்துள்ளது. நாளை நடைபெறும் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்இ சன்ரைசர்ஸ் ஐதராபாத் – டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.