SuperTopAds

உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தக்கோரி போராட்டம்!! -ரஷியாவில் ஆயிரக்கணக்கானோர் கைது-

ஆசிரியர் - Editor II
உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தக்கோரி போராட்டம்!! -ரஷியாவில் ஆயிரக்கணக்கானோர் கைது-

உக்ரைன் மீதான தொடர் தாக்குதலை நிறுத்தக்கோரி ரஷியாவின் பல்வேறு நகரங்களில் நேற்று ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

உக்ரைன் மீது ரஷியா இன்று திங்கட்கிழமை 12 ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன.  

இதற்கிடையில், உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், போரை நிறுத்தக்கோரியும் பல்வேறு நாடுகளில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், ரஷியாவில் இதுபோன்ற போராட்டங்கள் பெருமளவில் போலீசாரால் கட்டுப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், போரை நிறுத்தக்கோரி ரஷியாவின் பல்வேறு நகரங்களில் நேற்று ஞாயிற்றுக்கிழமை போராட்டங்கள் நடைபெற்றது. அந்நாட்டின் 56 நகரங்களில் இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது.

புதின் அரசுக்கு எதிராகவும், உக்ரைன் மீதான போரை நிறுத்தக்கோரியும் கோஷங்களை எழுப்பி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகர் மாஸ்கோ உள்பட 56 நகரங்களில் நடைபெற்ற இந்த போராட்டத்தை பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர்.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட 4 ஆயிரத்து 366 பேரை பொலிஸார் கைது செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட அனைவரும் மாலை விடுதலை செய்யப்பட்டனர்.