SuperTopAds

இளம் தலைவர்களுக்கான ஒருநாள் செயலமர்வு

ஆசிரியர் - Editor III
இளம் தலைவர்களுக்கான ஒருநாள் செயலமர்வு

 

"சமூக அபிவிருத்தி பணிகளில் ஈடுபடும் இளம் பெண்களை ஊக்குவித்தலும், பங்கேற்பை அதிகரித்தலும்" எனும் தலைப்பில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் ஏற்பாட்டில் இளம் பெண் தலைவர்கள் இணைந்து ஸ்டார் விங்ஸ் அமைப்பின் தலைவி எம்.எஸ். றக்ஸானா பானுவின் தலைமையில் ஒருநாள் செயலமர்வொன்று நற்பிட்டிமுனை தனியார் மண்டபத்தில்  இன்று (05) இடம்பெற்றது. 

SEARCH FOR COMMON GROUND (சேர்ச் போ கொம்மன் கிரவுண்ட்) அனுசரணையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வளவாளர்களாக சமாதனம் மற்றும் சமூகப்பணி நிறுவன தேசிய இணைப்பாளர் த. தயாபரன்,  சேர்ச் போ கொம்மன் கிரவுண்ட் இந் கண்காணித்தல் மற்றும் கணக்கீட்டுக்கான பணிப்பாளர் எம்.ஐ. எம். சதாத் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சிகளை முன்னெடுத்தனர். 

இந்நிகழ்வில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் இணைப்பாளர் யூ. எல். ஹபீலா, சமூக வசதிப்படுத்துனர் ஆர். அனுஸ்கா, வழிகாட்டிகளான கல்முனை மாநகர சபை உறுப்பினர் , கே. விஜயலக்ஸ்மி, எம்.எம்.ஜே. பர்வின், கல்முனை அஸ்ஸுஹரா வித்தியாலய அதிபர் எம்.எச்.எஸ்.ஆர். மஜீதியா, பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் பி. ஜெனித்தா அடங்களாக இளம் பெண் தலைவிகளான ஜே. எப். ஜெஸ்னா, டி.லுக்சிகா , எம்.எஸ். றக்ஸானா பானு, எஸ். துவாரகா, ஏ.எச். பசீலா, ஏ.எச். சசீமா, ஆர். றொஸானா, ஜே. சிந்துஜா, ஏ.ஆர்.எப். நஜீபா, எல்.கே. சஜானா, ஜே.எப். ஜெஸ்னி எனப் பலரும் கலந்து கொண்டனர்.