அணுசக்தி நிலையம் மீது ரஷ்யா எறிகணைத் தாக்குதல்!!
ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுசக்தி நிலையமான, ஸபோரிஸியா அணுசக்தி நிலையம் மீது, ரஷ்யா படைகள் எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளதால் அங்கு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, அந்த அணுசக்தி நிலையத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதென வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவமானது, சர்வதேச அணுசக்தி முகவராண்மையின் கவனத்துக்கு உள்ளாகியுள்ளது. இவ்விடயம் தொடர்பில் உக்ரைன் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியுள்ளதாக சர்வதேச அணுசக்தி முகவராண்மை தெரிவித்துள்ளது.
உக்ரைனின் வலுசக்தி கேள்வியில், 25 சதவீதத்தை ஸபோரிஸியா அணுசக்தி நிலையம் பூர்த்தி செய்கிறது. இந்த நிலையில், ஸபோரிஸியா அணுசக்தி நிலையத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலானது, பாரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது என அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.