SuperTopAds

உக்ரைன் போரால் தனித்துவிடப்படும் ரஷ்யா!! -சமூக வலைதளங்கள் முழுதாக முடக்கம்-

ஆசிரியர் - Editor II
உக்ரைன் போரால் தனித்துவிடப்படும் ரஷ்யா!! -சமூக வலைதளங்கள் முழுதாக முடக்கம்-

ரஷ்யாவில் முகப்புத்தகம் உள்ளிட்ட அநேகமான சமூக வலைதளங்கள் பல இடங்களில் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24 ஆம் திகதி ஆரம்பித்து ஒவ்வொரு நாளும் உக்ரேனின் முக்கிய நகரங்கள் மீது தரை, வான், கடல் என மும்முனை தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது. 

உலக நாடுகள் தனிமைப்படுத்தினாலும், ரஷ்யா கண்டுகொள்ளாமல் தனது தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.

இதற்கிடையே உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா நிறுத்த வேண்டும் என்று சமூக வலைதளங்களான முகப்புத்தகம் (பேஸ்புக்), யூடியூப், இன்ஸ்டாகிராம் மற்றும் வட்ஸ்-அப் போன்றவைகளில் கருத்துக்களும், எதிர்ப்புக்களும் தொடர்ந்து பரவி வருகிறது.

இந்நிலையில், ரஷ்யாவில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் பல இடங்களில் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. உக்ரேன் போருக்கு எதிரான எதிர்ப்புக் கருத்துகள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து எழுந்து வருவதால் ரஷ்யா இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.