போரின் எதிரரொலி!! -ரஷ்ய இன பூனைகளுக்கு தடை-

உக்ரைன் நாட்டின் மீது நடத்தப்படும் தாக்குதலை அடுத்து ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டு பூனைகளுக்கு உக்ரேனில் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இவ்விடயம் தொடர்பில் சர்வதேச பூனை கூட்டமைப்பு வெளியிட்டு உள்ள அறிவிப்பில், உக்ரேன் குடியரசு மீது ரஷ்ய கூட்டமைப்பு இராணுவம் படையெடுப்பு நடத்தி, தொடங்கியுள்ள போரால் அதிர்ச்சி அடைந்தோம்.
இந்த போரால், பல மக்கள் உயிரிழந்து உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர். இலட்சக்கணக்கான உக்ரேனியர்கள் வீடுகளை விட்டு தங்களை காத்து கொள்ள வேறு இடங்களுக்கு தப்பியோடி உள்ளனர்.
இந்த வன்முறைகளை கண்டுகொண்டு பேசாமல் இருந்து விட முடியாது. அதனால், இம்மாதத்தில் இருந்து, ரஷ்யாவில் உள்ள பூனை இனங்கள் எதனையும் இறக்குமதி செய்யவோ மற்றும் ரஷ்யாவுக்கு வெளியே எங்களது அமைப்பில் பதிவு செய்யவோ முடியாது என தெரிவித்து உள்ளது.
இந்த கட்டுப்பாடுகள் வருகிற மே 31 ஆம் திகதி வரை அமலில் இருக்கும். தேவையானபோது, இந்த முடிவு மறுஆய்வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.