SuperTopAds

உக்ரைன் மீது 5 ஆவது நாளாக போர்!! -முதல் முறையாக பாதிப்பை ஒப்புக்கொண்ட ரஷியா-

ஆசிரியர் - Editor II
உக்ரைன் மீது 5 ஆவது நாளாக போர்!! -முதல் முறையாக பாதிப்பை ஒப்புக்கொண்ட ரஷியா-

உக்ரைன் மீது இன்று திங்கட்கிழமை 5 ஆவது நாளாகவும் நடத்தி வரும் தொடர்ச்சியான தாக்குதலில் தங்கள் தரப்பில் பாதிப்புகள் ஏற்பட்டது உண்மைதான் என்று ரஷியா முதன் முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தொடர்ந்து ஐந்தாவது நாளாக தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனின் 2 ஆவது பெரிய நகரமான கார்கீவில் ரஷியா- உக்ரைன் படைகள் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது. 

போரால் உக்ரைன் நாட்டு மக்கள் 350ற்க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இரு தரப்பிற்கும் இடையே நடந்துவரும் மோதலில் 4,300 ரஷிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தது. உக்ரைன் தெரிவித்த இந்தப் பலி எண்ணிக்கை குறித்து ரஷியா எந்த மறுப்பும் தெரிவிக்காமல் இருந்து வந்தது. 

இந்நிலையில்  உக்ரைன் மீது நடத்தி வரும் தாக்குதலில் தங்கள் தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டது உண்மைதான் என ரஷ்யா முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.