SuperTopAds

ரஷியா கைப்பற்றிய கார்கிவ் பகுதியை மீண்டும் மீட்டது உக்ரைன் இராணுவம்!!

ஆசிரியர் - Editor II
ரஷியா கைப்பற்றிய கார்கிவ் பகுதியை மீண்டும் மீட்டது உக்ரைன் இராணுவம்!!

ரஷியா இராணுவம் தாக்குதல் நடத்திய கைப்பற்றிய கார்கிவ் பகுதியை மீண்டும் உக்ரைன் இராணுவத்தினர் மீள் தாக்குதல் நடத்தி மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

உக்ரைன் மீது ரஷியா 24 ஆம் திகதி வியாழக்கிழமை போர் தொடுத்தது. இன்று 4 ஆவது நாளில் தலைநகர் கீவ்வில் சண்டை நடந்து வருவதால் அங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் 2 ஆவது பெரிய நகரமான கார்கிவ் நகரத்தை ரஷியா கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில்  ரஷியா இராணுவம் கைப்பற்றிய கார்கிவ் பகுதியை மீண்டும் உக்ரைன் படைகள் மீட்டுள்ளது. கார்கிவ் தங்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக உக்ரைன் இராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.