உலகை அதிர வைக்கும் வடகொரியா!! -8 ஆவது முறையாக ஏவுகணை சோதனை-

வடகொரியா அரசாங்கம் இந்த வருடத்தில் மட்டும் 8 ஆவது ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது என்று அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.
ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானங்களை மீறி வட கொரியா அணு ஆயுதங்கள் மற்றும் அபாயகரமான ஏவுகணைகளை சோதித்து வருவதால் அந்த நாட்டின் மீது சர்வதேச நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
இந்த நெருக்கடிக்கு மத்தியிலும் வட கொரியா தனது இராணுவத் திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக ஏவுகணை சோதனையை தொடர்கிறது.
குறிப்பாக ஒலியைவிட 5 மடங்கு வேகமாக செல்கிற ஹைபர்சோனிக் ஏவுகணை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா சோதித்து வருகின்றது. இந்நிலையில், கிழக்குக் கடற்கரையில் உள்ள கடலை நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணையை வடகொரியா ஏவியுள்ளது. தலைநகர் பியோங்யாங்கிற்கு அருகிலுள்ள சுனானில் இருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.52 மணிக்கு ஏவுகணை ஏவப்பட்டது என தென்கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.