உக்ரைனுக்கு ஆயுதங்கள்!! -களத்தில் இறங்கும் அமெரிக்க, ஜேர்மன், நெதர்லாந்து-

ரஷ்யவின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள உக்ரைன் பாதுகாப்புக்கு ஆதரவாக மேலதிக ஆயுதங்களை வழங்குவதற்கு மேற்கத்திய நாடுகள் இணங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனுக்கு 350 மில்லியன் டொலர் பெறுமதியான யுத்த தாங்கிய ஆயுதங்களை வழங்கவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை உக்ரைனுக்கான பாதுகாப்பு ஆதரவை அதிகரிப்பதாக ஜேர்மன் சான்ஸ்லர் அறிவித்துள்ளார். சுமார் ஆயிரம் யுத்த தாங்கிகள் 500 ஏவுகணைகள் என்பவற்றை ஜேர்மன் உக்ரைனுக்கு வழங்கவுள்ளது.
நெதர்லாந்து ஊடாக இந்த உதவிகள் வழங்கப்படும் என ஜேர்மன் சான்ஸ்லர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.