உக்ரைனுக்கு உதவ பெரியளவிலான போருக்கு நாம் தயாராக வேண்டும்!! -பிரான்ஸ் ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு-

உக்ரைனுக்கு உதவிடும் வகையில், பெரியளவிலான போருக்கு நாம் தயாராக வேண்டும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரானுடன் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரானுடன், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்நிலையில் உக்ரைன் ஜனாதிபதியின் கோரிக்கையை ஏற்று, அந்நாட்டிற்கு ஆயுதங்கள், போர் தளவாடங்கள் வழங்கப்படும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதன்படி உக்ரைனுக்கு போதியளவில் போர் தளவாடங்கள் பிரான்சில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் மேலும் தகவல் தெரிவித்துள்ளார்.