SuperTopAds

அணு ஆயுதங்களால் பதிலடி!! -ரஷ்ய ஜனாதிபதி அதிரடி எச்சரிக்கை-

ஆசிரியர் - Editor II
அணு ஆயுதங்களால் பதிலடி!! -ரஷ்ய ஜனாதிபதி அதிரடி எச்சரிக்கை-

ரஷ்யா மீது போர் தொடுப்போருக்கு அணு ஆயுதங்களால் பதிலடி தரப்படும் என்று அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின் அதிரடியாக எச்சரித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- உலகின் மிக வலிமையான அணு ஆயுதங்கள் உள்ள நாடாக, ரஷ்யா விளங்குகிறது. அதுமட்டுமின்றி, ஏராளமான அதிநவீன போர் ஆயுதங்களும் ரஷ்யாவிடம் உள்ளன. அதனால் ரஷ்யாவை யார் தாக்கினாலும், அவர்கள் மோசமான விளைவுகளை சந்திக்க நேரும்.இவ்வாறு அவர் பேசினார்.

பல வருடங்களுக்குப் பின் உலக தலைவர் ஒருவர், தன்னிடம் அணு ஆயுதங்கள் உள்ளதை பகிரங்கமாக தெரிவித்து எச்சரித்துள்ளார். இது ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பிற்காக படைகளை அனுப்பும் அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.