SuperTopAds

உக்ரைன் தலைநகரில் இணையதள சேவை முடக்கம்!!

ஆசிரியர் - Editor II
உக்ரைன் தலைநகரில் இணையதள சேவை முடக்கம்!!

உக்ரைன் மீது தொடர்ந்து ரஷ்யா 3 ஆவது நாளாக இன்று சனிக்கிழமையும் தாக்குதல் நடத்தும் நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ்-வில் இணையதள சேவை தற்போது பாதிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷ்யா இன்று சனிக்கிழமை தாக்கக்கூடும் என அந்நாட்டு ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ஏற்கனவே கூறி இருந்தார். அதே போல் தற்போது ரஷ்ய இராணுவ வீரர்கள் தலைநகர் கீவ்-வை முழுமையாக கைப்பற்றும் நோக்கில் தாக்குதல் நடத்த ஆரம்பித்தன. 

இத் தாக்குதலைத் தொடர்ந்து ரஷ்யா 3 ஆவது நாளாக தாக்குதல் நடத்தும் நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ் -வில்  இணையதள சேவை தற்போது பாதிக்கப்பட்டுள்ளது.