SuperTopAds

தலைநகர் இராணுவ தளத்தின் மீதான ரஷ்ய தாக்குதல் முறியடிப்பு!! -உக்ரைன் ராணுவம் தகவல்-

ஆசிரியர் - Editor II
தலைநகர் இராணுவ தளத்தின் மீதான ரஷ்ய தாக்குதல் முறியடிப்பு!! -உக்ரைன் ராணுவம் தகவல்-

உக்ரைன் தலைநகர் கிவீல்தான் நாங்கள் இருக்கிறோம். நமது இராணுவமும் இங்குள்ளது. நமது சுதந்திரம், நாட்டைப் பாதுகாக்க நாம் இங்கு தொடர்ந்து இருப்போம் என ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து 3 ஆவது நாளாக இன்றும் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் அரசும் தங்களை தற்காத்துக் கொள்ள ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது.

உக்ரைன் தலைநகர் கீவ் நகரையும் நெருங்கியுள்ள ரஷிய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், கீவ் நகரில் உள்ள இராணுவ தளத்தைக் குறிவைத்து ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதல் முறியடிக்கப்பட்டது. கீவ்வில் இருந்து மேற்கே 8 மைல் தொலைவில் கடும் போர் நடந்து வருகிறது என உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.