போரில் ரஷ்ய வீரர்கள் 1000 பேர் பலி!! -உக்ரைன் பாதுகாப்பு துறை அமைச்சகம் தகவல்-

உக்ரைன் மீதான போரின் போது ரஷ்ய தரப்பில் 1000 படை வீரர்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
குறிப்பாக உக்ரைன் பாதுகாப்பு துறை அமைச்சகத்தினை மேற்கொள் காட்டி ராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்ட செய்தியில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கீவ் நகரை முற்றுகையிட்டுள்ள ரஷ்ய படைகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருவதாக உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது.