உக்ரைனுக்கு இராணுவ, தொழில்நுட்ப உதவிகள்!! -போர் களத்தில் இறங்கிய சுவீடன்-
இரு நாட்களான ரஷ்யாவின் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் உக்ரைனுக்கு இராணுவ உதவிகளை சுவீடன் அரசாங்கம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரு நாட்ளாகா உக்ரைன் நாட்டு மீது ரஷ்யா படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து நேட்டோ நாடுகளிடம் தங்களுக்கு உதவுமாறு உக்ரைன் கேட்டுக்கொண்டது.
இருப்பினும் நேட்டோ நாடுகள் இராணுவ உதவியோ அல்லது மற்ற எந்தவகையிலான உதவியோ செய்யாமல் மவுனம் காத்து வந்தன. இதனையடுத்து உக்ரைன் ஜனாதிபதி தங்களை காத்துக்கொள்ள தங்களுக்கு வழி வகை தெரியும் எனவும் அவர்கள் வேண்டுமானால் அஞ்சலாம் ஆனால் உக்ரைன் அஞ்சாது என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி வேதனை தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் சுவீடன் அரசு தொழில்நுட்ப உதவியும், இராணு ரீதியலான உதவியும் செய்து உள்ளது. இதனையடுத்து உக்ரைனுக்கு இராணுவ உதவி அளித்துள்ள முதல்நாடு என்ற பெயரை சுவீடன் பெற்றுள்ளது.