ரஷிய – சீன ஜனாதிபதிகள் திடீர் பேச்சு!!

உக்ரைனில் இரண்டு நாட்களாக நடைபெற்றுவரும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் ரஷிய ஜனாதிபதி புதினுடன் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆலோசனை நடத்தி உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
போர் தீவிரமடைந்து வருகின்ற இந்த சூழ்நிலையில் இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்த விவகாரத்தில் சீனா, ரஷியாவிற்கு ஆதரவு அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.