கீவ் நகரத்தை விட்டு வெளியேற மாட்டேன்!! -உக்ரைன் ஜனாதிபதி உறுதி-

ரஷியா படைகள் எவ்வாறானா தாக்குதலை நடத்தினாலும் கீவ் நகரத்தை விட்டு வெளியேற மாட்டேன் என்று உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது:
ஐரோப்பிய நாடுகளில் இரண்டாவது உலகப் போருக்கு பின்னர் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
ரஷியா என்னை முதல் இலக்காக வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. எனது குடும்பம்தான் அவர்களின் இரண்டாவது இலக்கு. உக்ரைனின் தலைமையை அழித்து, அரசியல் ரீதியாகவும் உக்ரைனை அழிக்க அவர்கள் நினைக்கின்றனர்.
கீவ் நகருக்குள் நாசவேலைகளில் ஈடுபடும் குழுக்கள் நுழைந்துள்ளன என்ற தகவல் கிடைத்துள்ளது. அதனால், நகர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஊரடங்கு விதிகளை மதித்து நடந்து கொள்ளுங்கள்.
உக்ரைன் அரசு பணியாற்ற தேவையான அதிகாரிகள் உள்ளிட்ட நபர்களுடன் ஒன்றாக நான் அரசு இல்லத்தில் தங்கியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.