ரஷிய மூர்க்கத் தாக்குதல்!! -உக்ரைனில் 40 படையினர், பொதுமக்கள் 10 பேர் பலி-
ரஷிய இராணுவம் நடத்திய தாக்குதலில் உக்ரைன் படை வீரர்கள் 40 பேரும், பொதுமக்கள் 10 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் அரசு தகவல் தெரிவித்துள்ளது.
உக்ரைனின் கிழக்கு மற்றும் வடக்கு எல்லை பகுதிகளில் ரஷிய படைகள் ஏவுகணைகளை பொழிந்து வருகின்றன. இதனால், லுஹான்ஸ்க், சுமி, கார்கிவ், செர்னிஹிவ் மற்றும் ஜைட்டோமைர் பகுதிகளில் தாக்குதல்கள் நடந்து வருகின்றன.
ரஷ்ய வீரர்களின் தாக்குதலில் உக்ரைன் படை வீரர்கள் 100 பேர் பலியாகி உள்ளதாக ரஷ்ய இராணுவம் தெரிவித்திருந்தது.
உக்ரைன் இராணுவ வீரர்கள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரணடைந்து வருகின்றனர் எனவும் தரை வழி மற்றும் வான்வழி தாக்குதலை தொடர்ந்து உக்ரைன் வீரர்கள் சரணடைந்து வருவதாக ரஷியா தகவல் தெரிவித்துள்ளது.
உக்ரைன் நாட்டு இராணுவ வீரர்கள் தாக்குதலில் ரஷியாவின் 50 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ரஷியா இராணுவம் நடத்திய தாக்குதலில் 40 ற்க்கும் மேற்பட்ட உக்ரைன் படை வீரர்கள், சுமார் 10 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் செலென்ஸ்கி அறிவித்துள்ளார். ரஷ்யா உடனான அனைத்து உறவுகளையும் முறித்துக் கொள்வதாக உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் செலென்ஸ்கி அறிவித்துள்ளார்.