SuperTopAds

கேரளா கஞ்சாவினை அதி சொகுசு காரில் கடத்திய இருவர் கைது

ஆசிரியர் - Editor III
கேரளா கஞ்சாவினை அதி சொகுசு காரில் கடத்திய இருவர் கைது

கேரளா கஞ்சாவினை அதி சொகுசு காரில் கடத்திய குற்றச்சாட்டில்   இரு சந்தேக நபர்களை  கல்முனை   பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பெரிய நீலாவணை பகுதியில்   இன்று புதன்கிழமை(23)  மதியம் கல்முனை  பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நீண்ட காலமாக  கேரளா கஞ்சா வாகனங்களின் மூலம் கடத்தப்பட்டு விற்பனை செய்து வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய கல்முனை  பொலிஸார் இராணுவத்தினர் இணைந்து பெரியநீலாவணை பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பு காவலரணில் பாதுகாப்பினை பலப்படுத்தி இருந்தனர்.

இந்நிலையில் பொலனறுவை பகுதியில் இருந்து பொத்துவில் நோக்கி ஹொன்டா ரக அதி சொகுசு காரில் 10 கிலோக்கும் அதிகமான கஞ்சா பொதிகளுடன் பயணம் செய்த இரு சந்தேக நபர்களை  பொலிஸ் மற்றும்  இராணுவத்தினர் இணைந்து மேற்கொண்ட  திடீர் சோதனையில் கைப்பற்றப்பட்டது.

குறித்த சோதனை நடவடிக்கையானது கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரி.எச்.எம்.  லசந்த புத்திகவின் நெறிப்படுத்தலில் கல்முனை பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி  எம் .ரம்சின் பக்கீர் வழிகாட்டலில்  துரிதமாக செயற்பட்ட பிரதம பொலிஸ் பரிசோதகர் அலியார் றபீக்  மற்றும் உப பொலிஸ் பரிசோதகரும் நிர்வாக பொறுப்பதிகாரியுமான ஜெ.எம்.ஏ திசாநாயக்க  பொலிஸ் சார்ஜன்ட் ஏ.எச்.மஜீத் (64270) உசைன்(62072) மஜீத் (43973) பொலிஸ் உத்தியோகத்தர்களான சதுன்(79554) சிந்தக (74629) விஜித(90954) பொலிஸ்  சாரதிகளான ஏ.எச்.எம் ஹம்தான் வசந்த   குழுவினர்   சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய குறித்த காரினை தடுத்து நிறுத்தி  அதில் பயணம் செய்த இரு சந்தேக நபர்கள் மற்றும் ரூபா 3 இலட்சத்திற்கும் அதிகமான பணம் 4 கைத்தொலைபேசி உள்ளிட்ட சான்று பொறுட்களை கைப்பற்றியுள்ளனர்.

மேலும் இவ்வாறு   கைதாகிய 27 மற்றும் 28 வயதுடைய சந்தேக நபர்கள் உட்பட மீட்கப்பட்ட  சான்று பொருட்கள்   பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து  செல்லப்பட்டு  மேலதிக விசாரணைகளை  கல்முனை  பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.