SuperTopAds

உக்ரைன் நடவடிக்கைக்காக ரஷ்யா மீது பொருளாதார தடை!! -கனடா பிரதமர் அதிரடி-

ஆசிரியர் - Editor II
உக்ரைன் நடவடிக்கைக்காக ரஷ்யா மீது பொருளாதார தடை!! -கனடா பிரதமர் அதிரடி-

கனடாவின் பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் ரஷ்யாவிற்கு எதிராக தொடர்ச்சியான பொருளாதார தடைகளை விதிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.  

ஜனாதிபதி விளாடிமிர் புதின் உக்ரைனின் பிரிவினைவாத பகுதிகளான டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகியவற்றிற்கு 'சுதந்திரத்தை' அங்கீகரிப்பதாக அறிவித்ததை அடுத்து, ரஷ்யாவிற்கு எதிராக நடவடிக்கை எடுத்தார்.

இதுகுறித்து  ட்ரூடோ தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்:-

உக்ரைனில் ரஷ்யாவின் சட்டவிரோத நடவடிக்கைகள் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் மற்றும் உலகம் முழுவதும் அமைதிக்கு அச்சுறுத்தலாகும். மேலும் இது ஒரு இறையாண்மை அரசின் மீதான படையெடுப்பு ஆகும். 

இதனால் நட்பு நாடுகளுடன் ஒருங்கிணைந்து, கனடா முதல் சுற்று பொருளாதார தடை விதித்துள்ளது என்று பதிவிட்டுள்ளார்.