'நாய் சேகர் ரிட்டன்ஸ்' படத்தில் நடிக்க கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிய வடிவேலு!
தமிழ் சினிமாவில் தன்னுடைய நகைச்சுவை மூலம் அசைக்க முடியாத இடத்தைப் பெற்றிருப்பவர் நடிகர் வடிவேலு. ஒரு நகைச்சுவை நடிகராக பல படங்களில் நம்மை கவர்ந்த வடிவேலு சில வருடங்களுக்கு முன் சினிமாவில் ஹீரோவாக அவதாரம் எடுத்தார்.
அப்படி அவர் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற ஒரு திரைப்படம் தான் இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசி. அந்த திரைப்படத்தின் வெற்றியை பார்த்து வடிவேலுவின் நடிப்பில் அதன் இரண்டாம் பாகமும் தயார் செய்ய தயாரிப்பு நிர்வாகம் முடிவெடுத்தது.
ஆனால் அந்தப் படத்தில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக வடிவேலுவுக்கு சினிமாவில் நடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் சில அரசியல் பிரச்சினையின் காரணமாகவும் வடிவேலு எந்த திரைப்படத்திலும் கமிட் ஆகாமல் ஒதுங்கி இருந்தார்.
அவர் படங்களில் நடிக்காமல் இருந்தாலும் அவருக்கு இருந்த ரசிகர் கூட்டம் அப்படியே தான் இருந்தது. மீண்டும் அவர் எப்போது திரைப்படத்தில் நடிப்பார் என்று அவரின் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்து வந்தனர். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் வடிவேலு நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தின் மூலம் மீண்டும் நடிப்பு திரும்பினார்.
இந்தப் படத்தைப் பற்றிய அறிவிப்பு செய்தியே மீடியாவில் பயங்கர வைரல் ஆனது. தற்போது இந்த படத்திற்கு பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு ஆரம்பித்து விட்டது. இதையடுத்து வடிவேலுவை தங்கள் படங்களில் நடிக்க வைக்க பல தயாரிப்பாளர்களும் போட்டி போட்டு வருகின்றனர்.
மேலும் அவர் இந்த நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்திற்காக 10 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அவர் அடுத்தடுத்த படங்களில் இந்த சம்பளத்தை இன்னும் உயர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
என்னதான் அவர் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தாலும் அவருக்கு இருந்த அந்த புகழும், மார்க்கெட்டும் இப்பவும் உச்சத்தில்தான் இருந்து கொண்டிருக்கிறது. இதனாலேயே அவர் கேட்ட பணத்தை கொடுப்பதற்கு தயாரிப்பாளர்களும் முன்வருகின்றனர்.
மாநாடு படத்திற்கு முன் 15 முதல் 20 கோடி சம்பளம் வாங்கிக்கொண்டு வந்தார் சிம்பு, தற்போது அவர் மார்க்கெட் வேற லெவல் போய்விட்டது. வடிவேலு இன்னும் 4,5படங்களில் சிம்புவின் மார்க்கெட்டை தொட்டு விடுவார் போல.தமிழ் சினிமாவில் தன்னுடைய நகைச்சுவை மூலம் அசைக்க முடியாத இடத்தைப் பெற்றிருப்பவர் நடிகர் வடிவேலு. ஒரு நகைச்சுவை நடிகராக பல படங்களில் நம்மை கவர்ந்த வடிவேலு சில வருடங்களுக்கு முன் சினிமாவில் ஹீரோவாக அவதாரம் எடுத்தார்.
அப்படி அவர் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற ஒரு திரைப்படம் தான் இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசி. அந்த திரைப்படத்தின் வெற்றியை பார்த்து வடிவேலுவின் நடிப்பில் அதன் இரண்டாம் பாகமும் தயார் செய்ய தயாரிப்பு நிர்வாகம் முடிவெடுத்தது.
ஆனால் அந்தப் படத்தில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக வடிவேலுவுக்கு சினிமாவில் நடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் சில அரசியல் பிரச்சினையின் காரணமாகவும் வடிவேலு எந்த திரைப்படத்திலும் கமிட் ஆகாமல் ஒதுங்கி இருந்தார்.
அவர் படங்களில் நடிக்காமல் இருந்தாலும் அவருக்கு இருந்த ரசிகர் கூட்டம் அப்படியே தான் இருந்தது. மீண்டும் அவர் எப்போது திரைப்படத்தில் நடிப்பார் என்று அவரின் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்து வந்தனர். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் வடிவேலு நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தின் மூலம் மீண்டும் நடிப்பு திரும்பினார்.
இந்தப் படத்தைப் பற்றிய அறிவிப்பு செய்தியே மீடியாவில் பயங்கர வைரல் ஆனது. தற்போது இந்த படத்திற்கு பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு ஆரம்பித்து விட்டது. இதையடுத்து வடிவேலுவை தங்கள் படங்களில் நடிக்க வைக்க பல தயாரிப்பாளர்களும் போட்டி போட்டு வருகின்றனர்.
மேலும் அவர் இந்த நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்திற்காக 10 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அவர் அடுத்தடுத்த படங்களில் இந்த சம்பளத்தை இன்னும் உயர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
என்னதான் அவர் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தாலும் அவருக்கு இருந்த அந்த புகழும், மார்க்கெட்டும் இப்பவும் உச்சத்தில்தான் இருந்து கொண்டிருக்கிறது. இதனாலேயே அவர் கேட்ட பணத்தை கொடுப்பதற்கு தயாரிப்பாளர்களும் முன்வருகின்றனர்.
மாநாடு படத்திற்கு முன் 15 முதல் 20 கோடி சம்பளம் வாங்கிக்கொண்டு வந்தார் சிம்பு, தற்போது அவர் மார்க்கெட் வேற லெவல் போய்விட்டது. வடிவேலு இன்னும் 4,5படங்களில் சிம்புவின் மார்க்கெட்டை தொட்டு விடுவார் போல.