SuperTopAds

அமெரிக்கர்களை குறிவைத்தால் பதிலடி கொடுத்தே தீருவோம்!! -ரஷ்யாவை எச்சரித்த ஜோ பைடன்-

ஆசிரியர் - Editor II
அமெரிக்கர்களை குறிவைத்தால் பதிலடி கொடுத்தே தீருவோம்!! -ரஷ்யாவை எச்சரித்த ஜோ பைடன்-

உக்ரைனில் உள்ள அமெரிக்கர்களை ரஷ்யா குறிவைக்குமாறு இருந்தால், தகுந்த பதிலடி கொடுப்போம் என அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைன் - ரஷ்யா எல்லையில் படைகள் குவிப்பால் நாளுக்கு போர் பதற்றம் தொடர்ந்து வருகின்றது. நேற்று முன்தினம் ரஷ்யா படைகள் மீளப்பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் அதனை மறுத்துள்ள அமெரிக்கா, எல்லையில் மேலும் படைகளை ரஷ்யா குவித்து வருவதாக குற்றம் சுமத்தியுள்ளது. 

இந்நிலையில் உக்ரைனில் உள்ள அமெரிக்கர்களை ரஷ்யா குறிவைத்தால், தக்க பதிலடி கொடுப்போம் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு தீர்க்கமான பதிலடி கொடுக்க அமெரிக்கா தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை ஆண்டனி பிளிங்கன் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைன் விவகாரத்தில் அமைதியை ஏற்படுத்த இன்னும் சாத்திய கூறுகள் உள்ளதாக கூறியுள்ளார். மேலும், சர்வதேச பாதுகாப்பு விதிமுறைகளின்படி ரஷ்யா அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, அமெரிக்கா மற்றும் நேட்டோ கூட்டமைப்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். ஐரோப்பாவில் நடுத்தர தொலைவு ஏவுகணைகளை நிலைநிறுத்துவதற்கான வரம்புகள், பயிற்சிகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட ரஷ்யா தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால், ரஷ்யாவின் முக்கிய கோரிக்கைகளுக்கு மேற்கு நாடுகள் செவிசாய்க்க வேண்டும் என புதின் வலியுறுத்தியுள்ளார்.