யாழ்.மாவட்ட மக்களை அச்சுறுத்தும் வழிப்பறி கொள்ளையர்கள்..! வாள்களுடன் அட்டகாசம் அதிகரிப்பு, தடுக்க முயற்சித்த இராணுவம் மீதும் தாக்குதலாம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்ட மக்களை அச்சுறுத்தும் வழிப்பறி கொள்ளையர்கள்..! வாள்களுடன் அட்டகாசம் அதிகரிப்பு, தடுக்க முயற்சித்த இராணுவம் மீதும் தாக்குதலாம்..

யாழ்.மாவட்டத்தில் இரவு நேரங்களில் வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் நடவடிக்கை எடுக்கவேண்டிய பொலிஸார் அசமந்தமாக உள்ளனர் என பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

யாழ்.கோப்பாய் பகுதியில் கடந்த ஞாயிற்று கிழமை பயணிகள் பேருந்து ஒன்றை வழிமறித்த கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதன்போது பேருந்து சாரதி திருப்பி தாக்கியதால் பின்வாங்கியதுடன் சற்று நேரத்தில் அந்த இடத்திற்கு

மேலும் சில மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல் கோப்பாய் சமிக்ஞை விளக்கு பகுதியில் வைத்து பேருந்து மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுட்டிருந்த இராணுவத்தினர் 

தாக்குதலை தடுக்க முயன்றபோது இராணுவத்தினர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து பதில் தாக்குதல் நடத்திய இராணுவத்தினர் ஒரு காவாலியை கைது செய்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டபோதும் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவேயில்லை. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணைகளை நடத்தினர். 

இதற்குள் பேருந்தில் இருந்த சுமார் 2 லட்சம் பணம் தாக்குதல் நடத்திய காவாலிகளால் கொள்ளையடித்து செல்லப்பட்டுள்ளது. இவ்வாறான சம்பவங்கள் யாழ்.மாவட்டத்தில் அதிகரித்த வண்ணமே உள்ளது. 

கோண்டாவில் பகுதியில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். அதேபோல் பருத்தித்துறை பகுதியில் பூசகர் ஒருவரை நிர்வாணமாக்கி அடித்து துன்புறுத்தியதுடன் 

பெருமளவு பணத்தை கம்பமாக பெற்ற சம்பவம் உள்ளிட்ட பல சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு