SuperTopAds

கல்முனை பிரதேச செயலக moon Gloaming ஒன்றுகூடலும் கௌரவிப்பு நிகழ்வும்

ஆசிரியர் - Editor III
கல்முனை பிரதேச செயலக moon Gloaming ஒன்றுகூடலும் கௌரவிப்பு நிகழ்வும்

கல்முனை பிரதேச செயலகத்தில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட  Moon Gloaming   2022 ஆம் ஆண்டிற்கான ஒன்றுகூடல் நிகழ்வு செவ்வாய்க்கிழமை மாலை (15) பி.ப 4.00 மணியளவில்  ஆரம்பமாகி இரவு  9 மணிவரை கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் கல்முனை பிரதேச செயலக வளாகத்தில் மிக விமரிசையாக நடைபெற்றது.

இந்நிகழ்வில்   ஓய்வு பெற்று, இடம் மாற்றலாகிச் சென்ற மற்றும் அலுவலகத்தில் சிறப்பாக கடமையாற்றிய உத்தியோகத்தர்கள்  கௌரவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கான  நினைவு சின்னங்கலும் பரிசில்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எம் .ஏ .டக்லஸ் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும்   கெளரவ அதிதிகளாக கல்முனை மாநகர முதலவர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம்.ரக்கீப் , அம்பாறை மாவட்ட மேலதிக செயலாளர் வி.ஜெகதீசன்  ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும்  விசேட அதிதிகளாக நிந்தவூர் பிரதேச செயலாளரும் முன்னாள் அம்பாறை மாவட்ட மேலதிக செயலாளருமான சட்டத்தரணி ஏ.எம் அப்துல் லத்தீப்,சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஐ.எம் ஹனீபா,சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம் ஆசீக்,இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம் ரஷ்ஷான்(நளிமி),கல்முனை வலயக் கல்வி கணக்காளர் வை.ஹபிபுல்லா, நாவிதன்வெளி பிரதேச செயலக கணக்காளர் ரிஸ்வி யஹ்சர் இறக்காமம் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சீ அஹமட் நசீல்,கல்முனை மாநகர பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம் அசீம், நிந்தவூர் உதவி பிரதேச செயலாளர் ஜெசான் ஆசீக்,சாய்ந்தமருது உதவி பிரதேச செயலாளர் மெளபீக்கா பசீர்,மகா ஓயா உதவி பிரதேச செயலாளர் ஐமா நிஹ்மத்துல்லாஹ்,அம்பாறை மாவட்ட உதவி திட்டமிடல் பணிப்பாளர் எச்.பி.அனீஸ்,அம்பாறை மாவட்ட தலைமைப் பீட காணி உத்தியோகத்தர் கே.எல்.எம் முஸ்ஸமில்,கல்முனை பொலிஸ் தலைமைப் பொறுப்பதிகாரி எம்.ரம்சீம் பக்கீர் உட்பட இன்னும் பல உயர் அதிகாரிகள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.