பினுர பெர்னாண்டோவுக்கு கொரோனா தொற்று!!
அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் பங்கெடுத்துள்ள இலங்கை வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2 ஆவது ஒருநாள் போட்டிக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட ஆன்டிஜென் பரிசோதனையிலேயே அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் நேற்று சிட்னியில் நடந்த இரண்டாவது ரி-20 போட்டியை அவர் விளையாடவில்லை. வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள பினுர பெர்ணான்டோ, தற்போது சுகாதார பாதுகாப்பு ஆலோசனையின் கீழ் தனிமைப்படுத்தலில் உள்ளார்.