கல்முனை அல்-பஹ்றியா தேசிய பாடசாலையில் நாட்டின் 74 வது சுதந்திர தின நிகழ்வு

நாட்டின் 74 வது சுதந்திர தின விழா கல்முனை அல்-பஹ்றியா தேசிய பாடசாலையில் இன்று (04)நடைபெற்றது.
பாடசாலை அதிபர் எம். எஸ். எம் பைசால் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வுக்குபிரதம அததியாக கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி , கெளரவ அதிதியாக
உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.எம்.ஜெளபர் , சிறப்பு அதிதியாக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் கே.எல்.யாசீன் பாவா கல்முனை-3 பிரிவில் பிரிவுக்கு பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். ஐ. எம் .ஜிப்ரி , பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள் , பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் , பழைய மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிரதம அததியாக கலந்து கொண்டகல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலிஅவர்களினால் கொண்டு தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டது.
மேலும் நாட்டுக்காக உயிர்நீத்த படையினருக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது டன் பாடசாலை வளாகத்தில் மர நடிகை நிகழ்வும் இடம்பெற்றது .