ஐ.பி.எல். ஏலத்தில் 23 இலங்கை வீரர்கள்!! -ஹசரங்கவுக்கு சுமார் 3 கோடி-
இவ்வாண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஜ.பி.எல்) வீரர்கள் தேர்வுக்கன ஏல நடவடிக்கை எதிர்வரும் பெப்ரவரி 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் பெங்களூருவில் நடைபெறவுள்ளது.
இரண்டு நாள் மெகா ஏலத்தில் மொத்தம் 590 கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கவுள்ள நிலையில் அதில் 23 இலங்கை வீரர்களின் பெயர்களும் இணைக்கப்பட்டுள்ளது.
வனிந்து ஹசரங்க தனது இருப்பு விலையை 100 இலட்சமாக இந்திய ரூபாவாக நிர்ணயித்துள்ளார். அதேநேரம் 19 வயதுக்குட்பட்ட இலங்கை இளையோர் அணி சகலதுறை வீரர் துனித் வெல்லலகேவும் ஏலத்தில் பதிவு செய்துள்ளார்.
ஏலத்தில் பதிவுசெய்துள்ள இலங்கை வீரர்கள் இந்திய ரூபாவின் பெறுமதியுடன் உள்ளடக்கப்பட்ட விபரங்கள் வருமாறு:-
வனிந்து ஹசரங்க 100 இலட்சத்திற்கும், 50 இலட்சத்திற்கு மகேஷ் தீக்ஷணஇ
துஷ்மந்த சமீர, சரித அசலங்க, குசல் மெண்டீஸ், குசல் பெரேரா, நிரோஷன் திக்வெல்ல, அகில தனஞ்சய, பானுக ராஜபக்ஷ, பதும் நிஸ்ஸங்க, அவிஷ்க பெர்ணான்டோஇ தசூன் சானக்க, சமிக கருணாரத்ன, லஹிரு குமார, திசர பெரேராஇ இசுரு உதான, தனுஷ்க குணதிக்க, சீகுகே பிரசன்ன, தனஞ்சய லக்ஷான் ஆகியோரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 20 இலட்சத்திற்கு மகேஷ் பத்திரண, கவின் கோதேகொட, நுவான் துஷார, துனித் வெல்லாகேவும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.