சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து பெண்!! -குவியும் பாராட்டுக்கள்-
சுவிட்சர்லாந்தில் உள்ள மிகப் புகழ்மிக்க லுசேர்ன் பல்கலைக்கழகத்தின் ஆலோசகராக 35 வயதான இலங்கை தமிழ் யுவதி சுபா உமாதேவன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அவர் 3 வருடங்கள் சிறுவர் உரிமைகள் மற்றும் உதவி திட்ட சர்வதேச அமைப்பின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளராக கடமையாற்றியுள்ளார்.
மேலும் ஜெனிவா பல்கலைக்கழகத்தில் சர்வதேச விவகாரங்கள் மற்றும் சர்வதேச சட்டம் தொடர்பான சிறப்பு முதுகலை பட்டத்தையும் அவர் பெற்றுள்ளார். கனடாவின் ஒட்டாவாவில் அமைந்துள்ள சர்வதேச கற்கைகள் மற்றும் நவீன மொழிகள் தொடர்பான பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டத்தையும் பெற்றுள்ளார்.
பெண் வர்த்தகர்களுக்கான சர்வதேச அமைப்பின் சட்ட ஆலோசகராக பணியாற்றி வரும் அவர், யுனைஸ்கோ அமைப்பு ஆபிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் மேற்கொண்டு வரும் சர்வதேச திட்டங்களுக்கு தலைமை தாங்கி வருகிறார்.
இலங்கையிலிருந்து 2 வயதில் பெற்றோருடன் சுவிஸ் வந்த நிலையில் புலம் பெயர் தமிழர்களை பெருமைப்படவைத்த சுபா உமாதேவனுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறிவருகின்றனர்.