SuperTopAds

60 மாடிக் கட்டிடத்தில் இருந்து குதித்த அழகி!!

ஆசிரியர் - Editor II
60 மாடிக் கட்டிடத்தில் இருந்து குதித்த அழகி!!

 “மிஸ் அமெரிக்கா”  என்ற பட்டம் வென்ற அழகி 60 மாடி கட்டடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2019 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற “மிஸ் அமெரிக்கா”  அழகிப்போட்டியில் பட்டம் வென்றவர் ஜாஸ்லி ரிஸ்ட் (வயது 30). இவர் மாடலிங் துறையிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பணியாற்றி வந்தார்.

ஜாஸ்லி ரிஸ்ட் நியூயார்க் மாகாணத்தில் உள்ள மென்ஹெண்டன் நகரில் 60 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் 9 ஆவது மாடியில் உள்ள பிளாட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில், அவர் தான் வசித்துவந்த 60 மாடி கட்டிடத்தில் இருந்து கிழே குதித்து இன்று திங்கட்கிழமை தற்கொலை செய்துகொண்டார். ஜாஸ்லி இறுதியாக கட்டடத்தின் 29 ஆவது மாடியில் நின்றுகொண்டிருந்தபோது சி.சி.டிவி காட்சியில் பதிவாகியுள்ளார். 

அதன் பின் அவர் எந்த சிசிடிவி காட்சியிலும் பதிவாகவில்லை. இதனால், அவர் கட்டடத்தின் 29 ஆவது மாடியில் இருந்தே கிழே குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

தற்கொலை செய்துகொள்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் அவர் தனது இஸ்டாகிராம் பக்கத்தில், ‘இந்த நாள் உங்களுக்கு ஓய்வையும் அமைதியையும் கொண்டுவரும்’ என பதிவிட்டுள்ளார். இந்த தற்கொலை தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.