தளபதி விஜய் 66 ஆவது படத்தின் இசையமைப்பாளர், கதாநாயகி வாய்ப்பு யாருக்கு?

ஆசிரியர் - Editor II
தளபதி விஜய் 66 ஆவது படத்தின் இசையமைப்பாளர், கதாநாயகி வாய்ப்பு யாருக்கு?

தளபதி விஜய்யின் 66 ஆவது படத்தை தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாரிக்க உள்ளார்கள். அப்படத்தை தெலுங்கு இயக்குனரான வம்சி பைடிபள்ளி இயக்க உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு எதிர்வரும் மார்ச் மாதம் முதல் ஆரம்பமாக உள்ளது என அப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு அண்மையில் நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். இப்படத்தின் இசையமைப்பாளர், கதாநாயகி வாய்ப்பு யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது.

இப்படத்திற்கு தெலுங்கில் அண்மை காலங்களில் கலக்கிக் கொண்டிருக்கும் தமன் இசையமைக்க உள்ளதாக ஏற்கெனவே தகவல் வெளியாகியது. 

தளபதி விஜய்யின் 65 ஈவது படமாக 'பீஸ்ட்' படம் அறிவிக்கப்படுவதற்கு முன்பு ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தான் விஜய் நடிப்பதாக இருந்தது. கதாநாயகியாக பாலிவுட் நடிகைகள் யாராவது புதிதாக வருவார்களா, அல்லது ஏற்கெனவே தளபதி விஜய்யுடன் ஜோடியாக நடித்த நடிகைகள் நடிப்பார்களா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. வெகு சீக்கிரத்திலேயே இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என ஹைதராபாத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


உங்கள் முதுகுக்கு பின்னால் நான் நிற்கிறேன்.
இது கள்வர்கள், கயவர்கள் கவனத்திற்கு மட்டும்.. மேலும் சங்கதிக்கு

Radio