லண்டனில் மாயமான 13 வயது சிறுமி!! -குடும்பத்தினர் வெளியிட உருக்கமான பதிவு-

ஆசிரியர் - Editor II
லண்டனில் மாயமான 13 வயது சிறுமி!! -குடும்பத்தினர் வெளியிட உருக்கமான பதிவு-

லண்டனில் கடந்த 20 ஆம் திகதி பாட்டியை பார்க்கச் சென்ற நிலையில் மாயமான 13 வயது சிறுமி தொடர்பிலான பின்னணி தகவல்களை பொலிஸார் தற்போது வெளியிட்டுள்ளனர்.

லண்டனை சேர்ந்த 13 வயதுடைய நேடடநை ளுஅiவா எனும் சிறுமி கடந்த 20 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 7 மணியளவில் இருந்து நிலையில் மாயமாகியுள்ளார்.

இதுவரையில் சிறுமி கண்டுபிடிக்கப்படாத நிலையில அவர் வடக்கு லண்டனில் இருக்கலாம் எனவும், சிறுமி தனது தாயாரை காண சென்றிருக்கலாம் எனவும் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில்,சிறுமி குறித்து அவரது உறவினர்கள் சிலர் உருக்கமான பதிவுகளை சமூகவலைதளத்தில் வெளியிட்டு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

குறித்த பதிவில், நேடடநை தனது தலையில் கருப்பு சாயம் பூசியிருக்கலாம். 6 நாட்களுக்கு மேலாக காணாமல்போயுள்ள அவரை யாராவது கண்டால் உடனே எங்களை தொடர்பு கொள்ளவும், அவரின் பாதுகாப்பு குறித்து குடும்பத்தாருக்கு கவலை ஏற்பட்டுள்ளது எனவும் பதிவிடப்பட்டுள்ளது.

சிறுமி குறித்து தகவல் தெரிந்தால் தமக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கும் படி பொலிஸார் முக்கிய கோரிக்கையொன்றினையும் முன்வைத்துள்ளனர்.


உங்கள் முதுகுக்கு பின்னால் நான் நிற்கிறேன்.
இது கள்வர்கள், கயவர்கள் கவனத்திற்கு மட்டும்.. மேலும் சங்கதிக்கு

Radio