அடுத்த மாதம் ரஷ்யா படையெடுக்கலாம்!! -உக்ரேனை எச்சரிக்கும் பைடன்-

ஆசிரியர் - Editor II
அடுத்த மாதம் ரஷ்யா படையெடுக்கலாம்!! -உக்ரேனை எச்சரிக்கும் பைடன்-

உக்ரேனுக்கு எதிராக ரஷ்யா இராணுவ நடவடிக்கையினை அடுத்த மாதம் முன்னெடுக்கக்கூடிய தனித்துவமான சாத்தியக்கூறுகள் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உக்ரேன் ஜனாதிபதிக்கு எச்சரித்துள்ளார்.

அண்மைய வாரங்களில் உக்ரைனின் எல்லைகளில் பல்லாயிரக்கணக்கான ரஷ்ய வீரர்கள் குவிக்கப்பட்டிருப்பது படையெடுப்பு பற்றிய அச்சத்தைத் தூண்டியுள்ளது. இருப்பினும் தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிடுவதாக வெளியான செய்திகளை மொஸ்கோ மறுத்துள்ளது.

இந் நிலையில் வியாழன் அன்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் நடத்திய தொலைபேசி உரையாடலின் போதே அமெரிக்க ஜனாதிபதி மேற்படி எச்சரிக்கையினை விடுத்துள்ளதாக வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு