ஆப்கானில் பெரும் பஞ்சம்!! -சிறுநீரகத்தை விற்று உணவு தேடும் அவலத்தில் மக்கள்-

ஆசிரியர் - Editor II
ஆப்கானில் பெரும் பஞ்சம்!! -சிறுநீரகத்தை விற்று உணவு தேடும் அவலத்தில் மக்கள்-

ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து அந்நாட்டில் வாழும் மக்கள் மிகப் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்து வருகின்றனர். 

குறிப்பாக அந்நாட்டில் சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பு மற்றும் வருமானத்தை இழந்துள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக நாடுகள் ஆப்கானுக்கு சொந்தமான சொத்துக்களைப் பயன்படுத்த அனுமதிக்காத நிலையில், கடுமையான நிதிநெருக்கடி ஏற்பட்டுள்ளது.

உணவுப் பொருட்கள் மற்றும் மேலும் சில அத்தியாவசிய பொருட்களுக்கு பெரும்  பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், அந்நாட்டில் சுமார் 2.2 கோடி மக்கள் தற்போது பஞ்சத்தில் வாடி வருவதாகப் பொருளாதார வல்லுனரான அப்துல் நசீர் ரிஷ்டியா சுட்டிக்காட்டியுள்ளார்.

வேலையிழப்பு, பஞ்சம் ஆகியவற்றால் அந்நாட்டில் உள்ள கிராமங்களில் உள்ள மக்கள் தமது சிறுநீரகத்தை விற்று உணவு தேடி வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

ஹெரட் மாகாணத்தில் உள்ள வைத்தியசாலையில் கடந்த சில நாட்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

ஒரு சிறுநீரகத்திற்கு 190,000 ரூபா (இலங்கை நாணய மதிப்பு) வரை வழங்கப்படுவதுடன், 5 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களின் சிறுநீரகங்களும் விற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு