நடுக்கடலில் கவிழ்ந்த படகு!! -39 பேர் மாயம்-

ஆசிரியர் - Editor II
நடுக்கடலில் கவிழ்ந்த படகு!! -39 பேர் மாயம்-

அமெரிக்கா நாட்டிலுள்ள புளோரிடா மாகாணத்தின் கடற்கரையில் கடந்த சனிக்கிழமை இரவு படகு விபத்துக்குள்ளாகி கவிழ்ந்ததில் 39 பேர் காணாமல் போயுள்ளார்கள்.

காணாமல் போனவர்களை அந்நாட்டின் கடலோர காவல்படை அதிகாரிகள் தேடும் நடவடிக்கையில் மிக மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறித்த படகின் மேலோட்டத்தில் ஒருவர் இருப்பதை மீனவர்கள் கண்டதை அடுத்து காவல்படை அதிகாரிகள் அவரை மீட்டுள்ளனர்.

படகு மோசமான வானிலை தாக்கியதாக மீட்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார். இந்த படகு மனித கடத்தல் முயற்சியின் ஒரு பகுதியாக இருக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அடையாளம் காணப்படாத மீட்கப்பட்ட நபரின் கருத்தின்படி, பயணிகள் யாரும் உயிர்காக்கும் ஆடைகளை அணிந்திருக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் வரை, உயிர் பிழைத்தவர்கள் யாரும் கண்டுபிடிக்கப்படவில்லை.


உங்கள் முதுகுக்கு பின்னால் நான் நிற்கிறேன்.
இது கள்வர்கள், கயவர்கள் கவனத்திற்கு மட்டும்.. மேலும் சங்கதிக்கு

Radio