ஐ.சி.சி.யின் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்தார் சமரி அதபத்து!!

ஆசிரியர் - Editor II
ஐ.சி.சி.யின் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்தார் சமரி அதபத்து!!

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவர் சமரி அதபத்து ஐ.சி.சி.யின் மகளிர் ரி-20 துடுப்பாட்ட வீரர்களுக்கான பட்டியலில் ஆறு இடங்கள் முன்னேறியுள்ளார்.

மலேசியாவில் அண்மையில் நடந்த பொதுநலவாய விளையாட்டுப் போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்களில் சமரி அதபத்து 55.25 சராசரி மற்றும் 185.71 நிகர சராசரியுடன் மொத்தமாக 221 ஓட்டங்களை அதிரடியாக குவித்தார்.

இதனால் ஐ.சி.சி.யின் மகளிர் ரி-20 துடுப்பாட்ட வீரர்களுக்கான பட்டியலில் ஆறு இடங்கள் முன்னேறிய அவர் 8 ஆவது இடத்தை பிடித்தார். இது தவிர மகளிர் ரி-20 சகலதுறை வீரர்களுக்கான பட்டியலிலும் சமரி அதபத்து ஒரு இடம் முன்னேறி, ஏழாவது இடத்திற்கு வந்தார்.


உங்கள் முதுகுக்கு பின்னால் நான் நிற்கிறேன்.
இது கள்வர்கள், கயவர்கள் கவனத்திற்கு மட்டும்.. மேலும் சங்கதிக்கு

Radio