சுதந்திரக் கிண்ண கால்பந்தாட்ட போட்டி!! -தேசிய அணி வீரரின் தலைமையில் களமிறங்கும் வடக்கு அணி-

ஆசிரியர் - Editor II
சுதந்திரக் கிண்ண கால்பந்தாட்ட போட்டி!! -தேசிய அணி வீரரின் தலைமையில் களமிறங்கும் வடக்கு அணி-

நாட்டின் மாகாணங்களுக்கு இடையிலான சுதந்திர கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றும் நம்பிக்கையோடு வடக்கு மாகாண அணி களம் இறங்கவுள்ளது.

வடக்கு மாகாண அணியின் தலைவராக தேசிய வீரரும் அப்கன்ட்றி லயன்ஸ் அணித் தலைவருமான மரியதாஸ் நிதர்ஷன் நியமிக்கப்பட்டுள்ளதுடன் இந்த அணியில் முழுக்க முழுக்க வட மாகாணத்தைச் செர்ந்த வீரர்களே இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் வட மாகாணத்தில் கால்பந்தாட்ட வீரர்களுக்கு பஞ்சம் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண அணியில் இடம்பெறும் வீரர்களில் பெரும்பாலானவர்கள் சுப்பர் லீக் கால்பந்தாட்டத்தில் பல்வெறு கழகங்களுக்காக விளையாடிய அனுபவசாலிகள்.

மன்னார் மாவட்டத்தச் சேர்ந்தவரும் 23 வயதுக்குட்பட்ட தேசிய அணியின் உதவிப் பயிற்றுநருமான ரட்ணம் ஜஸ்மின் வடக்கு மாகாண அணியின் பயிற்றுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.


உங்கள் முதுகுக்கு பின்னால் நான் நிற்கிறேன்.
இது கள்வர்கள், கயவர்கள் கவனத்திற்கு மட்டும்.. மேலும் சங்கதிக்கு

Radio