சர்வதேச திரைப்பட விழா 3 விருதுகளை அள்ளிய ஜெய் பீம்!!

ஆசிரியர் - Editor II
சர்வதேச திரைப்பட விழா 3 விருதுகளை அள்ளிய ஜெய் பீம்!!

நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில் சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜெய் பீம்’ திரைப்படம் மூன்று வேவ்வோறு விருதுகளை அள்ளிச் சென்றுள்ளது. 

இருளர் பழங்குடியின மக்களின் வாழ்க்கை மற்றும் உரிமைகள் பற்றி பேசும் இப்படத்தில் நடிகர் சூர்யா, பழங்குடியின மக்களுக்காக வாதாடும் சட்டத்தரணி வேடத்தில் நடித்துள்ளார்.  

கடந்த வருடம் நவம்பர் மாதம் தீபாவளியன்று ஓ.டி.டி.யில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் நல்ல விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தின் வெற்றியால் பல அங்கீகாரங்களும், விருதுகளும் குவிகின்றன.  

தொடர்ந்து இந்தாண்டு நடைபெற இருக்கும் ஆஸ்கார் விருதுகள் நாமினேஷனிலும் ‘ஜெய் பீம்’ இடம்பிடித்துள்ளது. இதேபோன்று சில நாட்களுக்கு முன்பு ஆஸ்கார் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் ‘ஜெய் பீம்’ திரைப்படத்தின் காட்சிகள் வெளிவந்தன. 

இந்நிலையில் ‘ஜெய் பீம்’ திரைப்படம் 9 ஆவது நொய்டா சர்வதேச திரைப்பட திருவிழா 2022 இல் 3 விருதுகளை வென்றுள்ளது. அதன்படி, சிறந்த நடிகராக சூர்யா, சிறந்த நடிகையாக லிஜோமோல் ஜோஸ் தேர்வாகி உள்ளனர். அதனுடன், சிறந்த படத்திற்கான விருதும் ஜெய்பீம் பெற்றுள்ளது.


உங்கள் முதுகுக்கு பின்னால் நான் நிற்கிறேன்.
இது கள்வர்கள், கயவர்கள் கவனத்திற்கு மட்டும்.. மேலும் சங்கதிக்கு

Radio