திடீரென பதவி விலகிய ரொஷான் மஹாநாம!!

ஆசிரியர் - Editor II
திடீரென பதவி விலகிய ரொஷான் மஹாநாம!!

இலங்கை கிரிக்கெட்டின் தொழில்நுட்ப மற்றும் ஆலோசனை குழுவிலிருந்து ரொஷான் மஹாநாம திடீரென தான் அந்த குழுவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

தனிப்பட்ட காரணங்களை முன்வைத்து தாம் கடந்த 21 ஆம் திகதியுடன் குறித்த குழுவிலிருந்து விலகியதாக ரொஷான் மஹாநாம உறுதிப்படுத்தியுள்ளார். 

கடந்த 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரைக் கைப்பற்றிய இலங்கை கிரிக்கெட் அணியில் ரொஷான் மஹாநாம இடம்பிடித்திருந்தார்.

அவர் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் போட்டி மத்திஸ்தராகவும் செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ரொஷான் மஹாநாமின் இராஜினாமா தொடர்பில் வினவியபோது, பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்துடன் ஏற்பட்ட இணக்கப்பாட்டின் காரணமாக ரொஷான் மஹாநாம இந்தப் பதவியில் இருந்து விலகுவதாக கிரிக்கெட் தொழில்நுட்பக் குழுவின் தலைவர் அரவிந்த டி சில்வா தெரிவித்தார்.


உங்கள் முதுகுக்கு பின்னால் நான் நிற்கிறேன்.
இது கள்வர்கள், கயவர்கள் கவனத்திற்கு மட்டும்.. மேலும் சங்கதிக்கு

Radio