ஒமிக்ரோன் பிறழ்வு பரவல்!! -நாட்டு மக்களுக்கான திருமணத்தை ரத்து செய்த நியூசிலாந்து பிரதமர்-
நியூசிலாந்தில் ஒமிக்ரோன் பிறழ்வு பரவ ஆரம்பித்த பின் முழு நாட்டிலும் மிகவும் உயர்ந்த அளவிலான கொரோனா கட்டுப்பாடுகளை அறிவித்ததையடுத்து, அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் தனது திருமணத்தை ரத்து செய்துள்ளார்.
பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ள தடுப்பூசி போடப்பட்ட 100 பேருக்கு அனுமதி மற்றும் கடைகள், பொது போக்குவரத்தில் முகக்கவசம் அணிதல் ஆகிய கட்டுப்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே, தொலைக்காட்சி தொகுப்பாளரான கிளார்க் கேபோர்ட் உடனான தனது திருமணம் நடைபெறாது என்பதை ஜெசிந்தா ஆர்டர்ன் நேற்று ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தினார்.
அந்நாட்டில் இதுவரை 15,104 கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதுடன், தொற்றுக்குள்ளான 52 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.