SuperTopAds

6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தியது கொல்கத்தா

ஆசிரியர் - Admin
6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தியது கொல்கத்தா

ஐபிஎல் தொடரின் 29-வது லீக் ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. பெங்களூர் அணியின் குயின்டான் டி காக்இ பிராண்டன் மெக்கல்லம் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்தது.

டி காக் 29 ரன்னிலும்இ மெக்கல்லம் 38 ரன்னிலும்இ மனன் வோரா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். அடுத்து ஆடிய விராட் கோலி நிதானமாக ஆடினார். அவருக்கு மந்தீப் சிங் ஒத்துழைப்பு அளித்தார். இந்த ஜோடி 65 ரன்கள் எடுத்தது. மந்தீப் சிங் 19 ரன்னில் அவுட்டானார்.

இறுதியில்இ பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 68 ரன்னுடனும்இ கிராண்ட்ஹோம் 11 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

கொல்கத்தா அணி சார்பில் ஆண்ட்ரூ ரஸ்ஸெல் 3 விக்கெட்டும்இ குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்துஇ 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் லின்இ சுனில் நரேன் ஆகியோர் இறங்கினர்.

கொல்கத்தா அணி 6.3 ஓவரில் 55 ரன்கள் எடுத்தபோது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. சிறிது நேரத்தில் ஆட்டம் மீண்டும் தொடங்கியது.

அணியின் எண்ணிக்கை 59 ஆக இருக்கும்போது சுனில் நரேன் 27 ரன்களில் அவுட்டானார். அடுத்து ஆடிய உத்தப்பா 21 பந்துகளில் 3 சிக்சர்இ 3 பவுண்டரியுடன் 36 ரன்கள் எடுத்து அவுட்டானார். அப்போது அணியின் எண்ணிக்கை 108 ஆக இருந்தது.

நிதிஷ் ரானா 15 ரன் எடுத்தபோது காயத்தால் பெவிலியன் திரும்பினார். அடுத்து ஆடிய ஆண்ட்ரூ ரஸ்ஸெல் டக் அவுட்டானார். தினேஷ் கார்த்திக் 23 ரன்னில் அவுட்டானார்.

இறுதியில்இ கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தியது. கிறிஸ் லின் 62 ரன்னுடனும்இ ஷுப்மன் கில் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

பெங்களூரு அணி சார்பில் முருகன் அஷ்வின்இ மொகமது சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.